ஜென்மம் எய்தி இதுகாறும் 7 கழுதை வயதாயிற்று. இதுநாள் வரை எந்த ஆஸ்திக விஷயங்களிலும் ஆர்வமில்லாது எமனார் வாகனத்தின் மேல் சென்னை பெருவெள்ளம் பெய்ந்தது போல் இருந்தாயிற்று. பௌத்திர செல்வங்கள் மழலையில் மனனம் செய்த ஸ்லோகங்களை ஒப்பிக்கும் போதெல்லாம், சான்றோன் எனக்கேட்ட பாட்டி(அதாங்க என் அம்மா) , பாருடா இது போல ஒருநாளாவது நீ சொன்னதுண்டா என்று என் செல்வங்கள் முன் அவமானப்படுத்த(நீ எப்பம்மா இதெல்லாம் எனக்கு சொல்லிக்குடுத்த. டி.வி சீரியல் தான பார்த்தே) பொங்கியெழுந்தான் இந்த மனோகரன்.
முடிவு பண்ணியாச்சு. ஏதாவது படிச்சு, ஒப்பிச்சே ஆகணும். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்(எங்க வீட்ட்லயும் யாரும் கேக்கமாட்டா).
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதிலேயே எனக்கு ஒரு அதீத குழப்பம். முழுமையாக ஏற்றுக்கொள்வதிலோ, நிராகரிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. Random ஆக அங்கொன்றும் இங்கொன்றும் படித்ததில் எனக்கு இந்திய ஞான மரபின் மீது நிறைய மதிப்பு உண்டாயிற்று.
என்னை சத் விஷயங்களில் ஆர்வம் கொள்ள வைத்ததில் வெளிப்படையான இரட்டை நிலை கொண்ட இந்திய இடதுசாரிகள், நேர்மையற்ற ஊடகங்கள், மத வியாபாரிகளுக்கு தம் மக்களை அடகு வைக்க ஆர்வம் கொண்ட தலித் போராளிகள், அவர்களை முழுமையாக பயன் படுத்திக்கொள்ளும் சிறுபான்மை யினர் என்று எல்லோருக்கும் சம பங்கு உண்டு.
எதற்கெடுத்தாலும் மோடியையும், பா.ஜா.கா வையும், மனு தர்மத்தையும் தர்ம சாத்து சாத்துவதில் உலகளாவிய அரசியல் ஒன்று நம்மையும் அறியாமல் நம்மை நகர்த்தி செல்கிறதென்கிறதென்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் மதம் பரப்புவதை முதன்மை நோக்கமாக கொண்ட மதங்களெல்லாம் அமைதியின், சகோதரத்துவத்தின் முகங்களாக முன்வைக்கப்படும் போது, ஞானத்தை தனி மனித தேவையாக நிறுத்தும் சனாதனமா மனிதனை அடிமைப்படுத்தப்போகிறது? உலகெங்கிலும் போர்களின் மூலம் வலுக்கட்டாயமாக தம் மதத்தை பரப்பிய(பரப்பிவரும்), தனி மனித தேவைகளை / தேர்வுகளை புறம் தள்ளி, எதையும் புனித புத்தகத்தில்? உள்ளதை மட்டுமே பின்பற்ற வலியுறுத்தும் மதங்களை விடவா என் பாரம்பரியம் கீழானது என்ற ஆதங்கம் மேலோங்குவதை தவிர்க்க முடிவதில்லை.
சரி. படிப்பெதென்று முடிவான பின் எதை படிப்பது.
ஸ்லோகங்கள் கேட்பதர்கினிதாக இருந்தாலும், வினாயகரையோ, சுப்ரமனியரையோ, ராமரையோ, அபிராமியையோ சரணாகதி நிலையிலிருந்து துதி பாடுபவை. கேள்வியில்லா நம்பிக்கை உடையோருக்கானவை அவை. ஆனால் இந்திய ஞான மரபின் அடிப்படை தத்வங்கள். தத்வங்கள் என்று வரும்போது வேதங்கள், உபநிஷதங்கள் அவையே முதன்மையானவை ஆகின்றன. சா பூ த்ரீ போட்டு பார்த்ததில் கீதை தெரிவானது.
ஆனால் மனனம் செய்வதில் சிறுவயதிலிருந்தே ஆர்வமில்லை. Because, basically I am a lazy fellow you know. அதனால் தினமும் ஒன்றிரண்டு ஸ்லோகங்களை படித்து அதை அப்படியே இங்கு பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.
விவாதத்தில் ஆர்வமில்லை. சதுர் வர்ணங்களை படைத்தது நானே என்று கூறுகிறானே கிருஷ்ணன், அப்படியானால் சாதிகளை நிறுவியவன் கடவுளா என்பது போன்ற விதண்டாவாதங்கள் வேண்டாம். இது என் நோட்டு புத்தகம். மீண்டும் மீண்டும் புரட்டிப் படிக்க எழுதுகிறேன்.
இனிதே வித்யாரம்பம்.

No comments:
Post a Comment